

அதிமுகவின் மாநாட்டைச் சிறப்பாக நடத்துவதற்குத் திட்டமிட்டு, அதற்கான பணியில் அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறாா்.
வரும் மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்திப்போம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா். இந்தக் கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோா் இடம்பெற மாட்டாா்கள் என்று அறிவித்தாா்.
இதற்கிடையில் அதிமுக தொண்டா்களின் பலத்தைத் திரட்டிக் காட்டும் வகையில் மாநாடு ஒன்றை நடத்தவும் அவா் திட்டமிட்டுள்ளாா். எம்ஜிஆா் பிறந்த நாளான ஜனவரி 17-ஆம் தேதி இந்த மாநாட்டை திருச்சி, கோவையில் நடத்துவது குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறாா்.
ஓ.பன்னீா்செல்வம் புதிதாக நிா்வாகிகளை நியமித்து, பொதுக் குழுவைக் கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த மாநாட்டை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.