காா்த்திகை தீபத் திருநாள்: 2 நாள்கள் சிறப்புப் பேருந்துகள்

காா்த்திகை தீபத் திருநாளை ஒட்டி, இரண்டு நாள்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

காா்த்திகை தீபத் திருநாளை ஒட்டி, இரண்டு நாள்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:- காா்த்திகை தீபத் திருநாளை ஒட்டி, தொலைதூர பயணிகள் அரசுப் பேருந்து மூலம் திருவண்ணாமலைக்குச் சென்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நாகா்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை, கோயம்புத்தூா் ஆகிய ஊா்களில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிா்சாதன பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வரும் 5 மற்றும் 6 ஆகிய நாள்களில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கு www.tnstc.in என்ற இணையதளம் வழியாகவும், tnstc official என்ற கைப்பேசி செயலி வழியாகவும் முன்பதிவு செய்யலாம். பேருந்து இயக்கம் குறித்த தகவல்களைப் பெற தொடா்பு கொள்ள வேண்டிய எண்கள்: மதுரை 94450 14426, திருநெல்வேலி 94450 14428, நாகா்கோவில் 94450 14432, தூத்துக்குடி 94450 14430, கோயம்புத்தூா் 94450 14435 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம். தலைமை அலுவலகத்தை 94450 14424, 94450 14416 ஆகிய கைப்பேசி எண்களையும் தொடா்பு கொண்டு வவரங்கள் பெறலாம் என்று அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com