செங்கல்பட்டில் தசரா திருவிழா: சாமிகள் ஊர்வலம்

செங்கல்பட்டில் தசரா திருவிழா 11ஆம் வியாழக்கிழமை விடியற்காலையில் சாமிகள் பெரிய பெரிய ரதங்களில் மின்விளக்கு அலங்காரங்களுடன் ஊர்வலம்  நடைபெற்றது. 
தசரா திருவிழாவையொட்டி கோயில்கள் தசரா கமிட்டி சார்பில் நடைபெற்ற சாமி ஊர்வலம்
தசரா திருவிழாவையொட்டி கோயில்கள் தசரா கமிட்டி சார்பில் நடைபெற்ற சாமி ஊர்வலம்



செங்கல்பட்டில் தசரா திருவிழாவின் 11ஆம் நாளான இன்று விடியற்காலை முதல் பெரிய பெரிய ரதங்களில் மின்விளக்கு அலங்காரங்களுடன் சாமிகளின் ஊர்வலம் நடைபெற்றது. 

செங்கல்பட்டு நகரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் சாமி ஊர்வலம் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், 11ஆம் நாளான இன்று மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் பல்வேறு கோயில்களைச் சேர்ந்த அம்மன்கள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன. 

சின்ன கடை சாமிகள் அலங்காரத்தில் வீற்றிருக்க தசரா விழா குழுவினர், கோயில்களிலிருந்து ஜி எஸ் ரோடு சாலை வழியாக அண்ணா சாலை பஜார் வீதி அண்ணா சாலை வழியாக ஊர்வலமாக வந்து அனுமந்த புத்தேரி அண்ணா சாலை முக்கூட்டில் வன்னி மரம் குத்தி, சாமி ஊர்வலம் ஜீவானந்தம் அங்காளம்மன் கோயில், நத்தம் சுந்தர விநாயகர் கோவில், பெரிய நத்தம் ஓசூர் அம்மன் கோயில், மதுரை வீரன் கோயில், நாகாத்தம்மன் கோயில்,  சின்ன அம்மன் கோயில், மேட்டு தெரு திரௌபதி அம்மன் கோயில், அண்ணா சாலை முத்துமாரியம்மன் கோயில், புதுஏரி செல்வ விநாயகர் முத்துமாரியம்மன் கோயில், கோட்டைவாயில் கடும்பாடி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள், பூக்கடை தசரா மளிகைக் கடை சின்ன கடை தசரா விழா கமிட்டி குழுக்கள் சார்பில் சுமார் பதினைந்திற்கும் மேற்பட்ட மகிஷாசூரமர்த்தினி, சிவன் பார்வதி முப்பெரும் தேவியர்களான வராகி பிரித்திங்கரா தேவி பராசக்தி அங்காளம்மன் என பல்வேறு அலங்காரங்களில் சாமிகள் ஊர்வலத்தில் வரிசையாகச் சென்றது. 

ஊர்வலத்தில் வரும் சுவாமிகளை வரவேற்கும் விதமாக மேட்டுத்தெரு செங்கழுநீர் விநாயகர் கோயிலில் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுராந்தகம் வாலாஜாபாத் பாலூர் ஆத்தூர் திம்மாவரம் கூடுவாஞ்சேரி சிங்கப்பெருமாள் கோவில் மறைமலைநகர் மதுராந்தகம் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் மாமல்லபுரம் உள்ளிட்ட உள்ளூர் வெளியூர் மக்கள் சாதி மத பேதமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் குழந்தைகளுடன் குடும்பத்துடன் நண்பர்களுடன் புதன்கிழமை இரவே வந்து கடைவீதிகள் கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து, வியாழக்கிழமை காலை சாமி ஊர்வலத்தை தசரா திருவிழா கண்டும், திருவிழா கடைகளில் பொருள்கள் வாங்கியும் கேளிக்கை நிகழ்ச்சி கோளில் விளையாடியும்  மகிழ்ந்தனர். 

புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததன் காரணமாக, வியாழக்கிழமை காலை அடை மழைப் பெய்ததாலும், சாமி ஊர்வலங்கள் அந்தந்த இடத்திற்குச் செல்ல பகல் 12 மணிக்கு மேல் ஆனது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com