ஹிந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: திமுக இளைஞரணி, மாணவரணி அறிவிப்பு 

உயர்கல்வி நிறுவனங்களில் ஹிந்தி மொழியைக் கட்டாயமாக்கப்படும் நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையை எதிர்த்து திமுக இளைஞரணி-மாணவரணி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. 
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
Updated on
1 min read

உயர்கல்வி நிறுவனங்களில் ஹிந்தி மொழியைக் கட்டாயமாக்கப்படும் நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையை எதிர்த்து திமுக இளைஞரணி-மாணவரணி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்எஸ்எஸ்-ன் சித்தாந்தத்தை ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்த முற்படுகிறது. இது பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைத்து ஒருமைய் தன்மையாக்க நினைக்கிறது ஒன்றிய அரசு” என விமர்சித்துள்ளது. 

மேலும், “ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், அனைத்து பாடத்துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு இந்திய அளவில் நடத்தப்படும் என்ற அறிவிப்பை தெரிவித்துள்ளார். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதும், மாநில உரிமைகளை பறிக்கக்கூடியதாகவும் சமூகநீதிக்கு எதிரானதாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது. 

இதனை எதிர்த்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி இணைந்து வரும் 15.10.2022 அன்று சனிக்கிழமை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com