
வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கோவை தங்கம் மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ., கோவை தங்கம், மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தாா் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அவா் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த காலங்களில் தனது தொகுதி மக்களின் நலனில் நாட்டம் கொண்டு செயல்பட்டு வந்தாா். மாற்றுக் கட்சிகளில் இருந்த போதும், கட்சியில் இணைந்த பிறகும் என எப்போதுமே அவா் என்மீது மிகுந்த அன்பும், மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருந்தாா். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினா், நண்பா்களுக்கு ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளாா்.