திருச்சியில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்!   

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திருச்சியில் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினர்.
திருச்சியில் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினர்.

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமை வகித்தார். 

மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.  உரங்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் தட்டுப்பாடு இன்றி யூரியா வழங்க வேண்டும். காவிரியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். வீணாகும் மழை நீரை ஏரி குளங்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருச்சியில் மேல் சட்டை அணியாமலும், கைகளில் திருவோடு ஏந்தியும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பிய விவசாய சங்கத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மேல் சட்டை அணியாமலும், கைகளில் திருவோடு ஏந்தியும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com