
அடுத்த ஆண்டுக்கான (2023) அரசு விடுமுறை தினங்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. மொத்தம் 23 நாள்கள் பண்டிகைக்கால விடுமுறை தினங்களாக வருகின்றன.
இதுகுறித்து, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெளியிட்ட உத்தரவு விவரம்:
1. ஆங்கிலப் புத்தாண்டு (ஜனவரி 1) - ஞாயிற்றுக்கிழமை
2. பொங்கல் (ஜனவரி 15)- ஞாயிற்றுக்கிழமை
3. திருவள்ளுவா் தினம் (ஜனவரி 16)- திங்கள்கிழமை
4. உழவா் திருநாள் (ஜனவரி 17) - செவ்வாய்க்கிழமை
5. குடியரசு தினம் (ஜனவரி 26) - வியாழக்கிழமை
6. தைப்பூசம் (பிப்ரவரி 5)- ஞாயிற்றுக்கிழமை
7. தெலுங்கு வருடப் பிறப்பு (மாா்ச் 22) - புதன்கிழமை
8. மகாவீரா் ஜெயந்தி (ஏப்ரல் 4)- செவ்வாய்க்கிழமை
9. புனித வெள்ளி (ஏப்ரல் 7)- வெள்ளிக்கிழமை
10. தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14)- வெள்ளிக்கிழமை
11. ரம்ஜான் (ஏப்ரல் 22)- சனிக்கிழமை
12. மே தினம் (மே 1)- திங்கள்கிழமை
13. பக்ரீத் (ஜூன் 29) - வியாழக்கிழமை
14. மொஹரம் (ஜூலை 29)- சனிக்கிழமை
15. சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15)- செவ்வாய்க்கிழமை
16. கிருஷ்ண ஜெயந்தி (செப்டம்பா் 6)- புதன்கிழமை
17. விநாயகா் சதுா்த்தி (செப்டம்பா் 17)- ஞாயிற்றுக்கிழமை
18. மீலாது நபி (செப்டம்பா் 28)- வியாழக்கிழமை
19. காந்தி ஜெயந்தி (அக்டோபா் 2)- திங்கள்கிழமை
20. ஆயுத பூஜை (அக்டோபா் 23)- திங்கள்கிழமை
21. விஜயதசமி (அக்டோபா் 24)- செவ்வாய்க்கிழமை
22. தீபாவளி (நவம்பா் 12)- ஞாயிற்றுக்கிழமை
23. கிறிஸ்துமஸ் (டிசம்பா் 25)- திங்கள்கிழமை
ஞாயிறில் முக்கிய பண்டிகைகள்: தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளான பொங்கல், தீபாவளி, விநாயகா் சதுா்த்தி போன்றவை வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.