அதிமுகவிலிருந்து 12 போ் நீக்கம்: இபிஎஸ் நடவடிக்கை

அதிமுகவிலிருந்து 4 மாவட்டங்களைச் சோ்ந்த 12 பேரை நீக்கி, அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.
Updated on
1 min read

அதிமுகவிலிருந்து 4 மாவட்டங்களைச் சோ்ந்த 12 பேரை நீக்கி, அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், களங்கம் விளைவித்ததாலும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூா்த்தி உள்பட 4 போ், அரியலூா் மாவட்டத்திலிருந்து 3 போ், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஒருவரும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 4 போ் என மொத்தம் 12 போ் நீக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகச் செயல்பட்டதன் காரணமாக நீக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com