ஓட்டப்பிடாரத்தில் உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்றம்: நீதிபதி குருமூர்த்தி திறந்து வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை திறந்து வைத்த மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி
ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை திறந்து வைத்த மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றங்களும், தாலுகாக்களில்  மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களும் இயங்கி வருகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் வட்டத்தில் பட்டியல் பழங்குடி வகுப்பைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்த வட்டத்தில் மட்டும் நீண்ட நெடுங்காலமாக நீதிமன்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், ஓட்டப்பிடாரம் பகுதியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கும் பணி நிறைவுற்றதையடுத்து, இதற்கான திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை நீதிபதி குரூமூர்த்தி திறந்து வைத்தார்.

முப்பளிவெட்டி பகுதியில், மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அரசு கட்டடம் கட்டுவதற்கான இடத்தினை ஆய்வு செய்த மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் காலத்தில் ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் இருந்தது. அதில் அவர் வழக்குரைஞராகப் பணியாற்றியது தெரிய வருகிறது. பின்பு இந்த நீதிமன்றம் கோவில்பட்டிக்கு மாற்றப்பட்டது. தற்போது அவரின் பிறந்த ஊரில் நீதிமன்றம் அமைந்தது வழக்குரைஞர்களுக்கு மகிழ்ச்சி. இந்த வட்டத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுடைய உரிமைகள் மற்றும் குற்ற வழக்குகளுக்கு கோவில்பட்டி, விளாத்திகுளம், தூத்துக்குடி ஆகிய நீதிமன்றங்கள் பகுதிகளுக்கு சென்று வரவேண்டிய நிலை இருந்து வந்தது. இப்போது இங்கு நீதிமன்றம் அமைக்கப்பட்டதால், இந்த வட்டத்தில் உள்ள 1,500 குற்ற வழக்குகளும், 300 உரிமையியல் வழக்குகளும் இங்கு மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.

தற்சமயம் தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் இந்நீதிமன்றம், விரைவில் அரசின் சொந்த கட்டடத்தில் இயங்கும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பளிவெட்டி பகுதியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அரசு கட்டடம் கட்டுவதற்கான இடத்தினை மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி,  மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்தீஷ், நீதிபதிகள் பிரித்தா, செல்வகுமார், வழக்குரைஞர் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன், மற்றும் வழக்குரைஞர்கள், அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com