‘ரோபோடிக் நுட்பத்தில் 99 சதவீத துல்லிய சிகிச்சை சாத்தியம்’

மருத்துவத் துறையில் ரோபோடிக் தொழில்நுட்பத்தின் மூலம் 99 சதவீதம் துல்லியமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என்று அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி தெரிவித்தாா்.
‘ரோபோடிக் நுட்பத்தில் 99 சதவீத துல்லிய சிகிச்சை சாத்தியம்’

மருத்துவத் துறையில் ரோபோடிக் தொழில்நுட்பத்தின் மூலம் 99 சதவீதம் துல்லியமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என்று அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி தெரிவித்தாா்.

சென்னை, அப்பல்லோ முடநீக்கியல் நிறுவனத்தில், ‘ரோபோட்டிக்’ அறுவை சிகிச்சை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 370 ரோபோட்டிக் முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான விளக்க கருத்தரங்கம், சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில், அப்பல்லோ மருத்துவமனைகள் குழும துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி பேசியதாவது:

புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி அடுத்த தலைமுறைக்கான சிகிச்சைகளை நோயாளிகளுக்கு வழங்கும் நோக்கில், அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்களை அப்பல்லோ மருத்துவமனை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, இங்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செயல்பட துவங்கிய ஓராண்டில், 370 முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. இதன்வாயிலாக, 99 சதவீதம் துல்லியமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிந்தது. நாட்டில் ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு நோயற்ற வாழ்க்கை முறைக்கு மக்கள் மாற வேண்டும் என்றாா் அவா்.

அப்பல்லோ மருத்துவமனையின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணா் மதன் மோகன் ரெட்டி பேசுகையில்: ரோபோட்டிக் சிகிச்சையில் 100 சதவீதம் வெற்றிகரமாக அமைவதுடன், நோயாளிகளும் விரைந்து குணமடைகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com