ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட் நிறுத்தப்படுகிறதா?

ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட் நிறுத்தப்பட்டு, சிவப்பு நிற ஆவின் பால் பாக்கெட் வாங்க மக்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தமிழகத்தில் நீலம், பச்சை, ஆரஞ்சு நிறங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நீல நிற கொழுப்பு நீக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளை குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்காக பலரும் வாங்குவது வழக்கம்.

அதுபோல அதிக அடர்த்தி காரணமாக ஆரஞ்சு நிறப் பாலை குடும்பத்தினர் வாங்குவார்கள். அதில் அடர்த்தி அதிகம் என்பதால் அதிக பயன்பாட்டுக்கு ஆரஞ்சு நிறப் பால் வாங்குகிறார்கள்.

இந்த நிலையில், ஆவின் நிர்வாகம் அதிகம் வாங்கப்படும் ஆரஞ்சு நிறப் பாலை நிறுத்திவிட்டு, அதை விட சத்துக் குறைந்த சிவப்பு நிறப் பால் பாக்கெட் விற்பனைக்கு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை விடுத்த அறிக்கையில், தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துவந்த, மக்கள் விரும்பி வாங்கிய, அதிக சத்துமிக்க ஆரஞ்சு வண்ண ஆவின் பால் பாக்கெட் நிறுத்தப்படவுள்ளதாக அறிகிறேன். அதற்கு பதிலாக சிவப்பு வண்ண பால் பாக்கெட் வாங்க மக்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனா்.

500 மி. அதிக சத்துமிக்க ஆரஞ்சு வண்ண பால் பாக்கெட் ரூ. 24-க்கும், இடைநிலையில் பச்சைவண்ண பால் பாக்கெட் ரூ. 22-க்கும், நீல வண்ண பால் பக்கெட் ரூ. 20-க்கும் ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் சத்து நிறைந்த ஆரஞ்சு வண்ண பாலை நிறுத்திவிட்டு, மறைமுகமாக மக்கள் மீது, சத்து குறைவான சிவப்புநிற பால் பாக்கெட் திணிக்கப்படுகிறதா?

தீபாவளிக்கு பால் மற்றும் பால் பொருள்களைப் பயன்படுத்தி பலகாரங்கள் தயாரிக்கும் இந்த வேளையிலே மறைமுகமாக பால் விலையை உயா்த்தும் வகையில் ஆரஞ்சு வண்ணத்தை தடைசெய்து சிவப்பு நிறத்தை முன்னிறுத்துவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். தீபாவளி பண்டிகையையொட்டி மக்களுக்கு பால், இனிப்பு விலையை உயா்த்தி பரிசு வழங்கியதாகவே தெரிகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா் கே.அண்ணாமலை.

இது குறித்து ஆவின் நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இது குறித்து ஆவின் நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால், ஆரஞ்சு பால் பாக்கெட், அட்டைதாரர்களுக்கு ரூ.24க்கு விற்பனை செய்யப்படுகிறது. படிப்படியாக இந்த பால் பாக்கெட் உற்பத்தியை நிறுத்திவிட்டு, ரூ.30 மதிப்புள்ள சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனையை அதிகரிப்பதன் மூலம், ஆவின் நிர்வாகத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட திட்டமிடப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து சிவப்பு நிறப் பாலை அல்லது குறைந்த அடர்த்தி கொண்ட பச்சை நிறப் பாலை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தீபாவளி நெருங்கும் நேரத்தில் தமிழக மக்களுக்கு இப்படி பால் விற்பனையில் அதிர்ச்சியை அளிக்காமல், இதற்கு ஆவின் நிர்வாகம்தான் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com