
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான காதல் கொலைகள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன.
சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் முன்பு கடந்த வியாழக்கிழமை கல்லூரி மாணவி தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், மகளின் இறப்பைத் தாங்க முடியாமல் தந்தை மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் காதலின் பெயரால் நடந்த கொலைகள் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேல் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நடக்கும் அனைத்து கொலைகளில் பத்து சதவீதத்திற்கும் அதிகமானவை திருமண உறவுகள், கூடுதல் திருமணம் உள்பட காதல் உறவுகளே காரணம்.
நாட்டில் நடக்கும் மொத்தக் கொலைகளில் பத்து சதவீதத்திற்கும் அதிகமானவை காதல் விவகாரங்கள் மற்றும் சட்டவிரோத உறவுகளே என்பதை வெளிப்படுத்துகிறது.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் பகுப்பாய்வுகள் படி, பதிவுசெய்யப்பட்ட 29,193 கொலைகளில் 3,031 கொலைகள் காதல் விவகாரங்களால் நடந்துள்ளன.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் பிடி, நாடு முழுவதும் 2020 ஆம் ஆண்டில் காதலால் நடந்த கொலைகள் மட்டும் 3031. இதில் மாநிலங்கள் வாரியாக கொலைகளின் எண்ணிக்கை பார்த்தால், உத்தரப்பிரதேசம் 462, மகாராஷ்டிரம் 299, மத்தியப்பிரதேசம் 298, பிகார் 285, தமிழ்நாடு 289, குஜராத் 231 என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் காதல் உறவுகள் தொடர்பான கொலைகள் அதிகமாகவே நடந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த புள்ளிவிவரங்கள் படி பார்த்தால், https://bit.ly/3VvFesT காதலில் தோல்விகளை சந்திக்கும் பக்குவமும், அதில் இருந்து மீண்டு வரும் நிதானமும் இன்றைய தலைமுறையினரிடையே இல்லை என்பது பகுப்பாய்வுகள் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
பொதுவாக அனைவரும் எல்லா விஷயத்திலும், ஒரு தலையாக உணர்வுப்பூர்வமாக மட்டும் சிந்திக்காமல், கருத்தியல் ரீதியாகவும், பின்விளைவுகள் குறித்தும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.
சகிப்புத்தன்மை குறைந்திவிட்ட இன்றைய சூழல்தான் ஒருதலைக்காதல் கொலைகளுக்கு முக்கிய காரணம். மாற்றுத்தரப்பின் உணர்வை, உள்ளத்தை புரிந்துகொள்ள முற்படாமல், பின்விளைவுகளைப் பற்றி சரியாக சிந்திக்காமல் ஒரு உணர்ச்சி வேகத்தில் ஒருவரையொருவர் விரும்பிகிறார்களே தவிர, இருவருக்கும் இடையே உண்மையான சரியான புரிதல் இருக்கிறதா என்றால் இல்லை என்றே நிலையே தொடர்கிறது.
காலங்கள் கடந்து பல்வேறு மாற்றாங்களும், வாழ்வியல் முறைகளும் வந்துவிட்டாலும் நீண்டு கொண்டே செல்லும் பெண்களின் மீதான கொடுமைகளுக்கு விடை காண வேண்டும் என்றால், இன்றை இளைய தலைமுறையினருக்கு நிராகரிப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு உளவியல் ரீதியாக சிறுவயதில் இருந்தே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி பழக வேண்டும். அதுவே தமிழ்நாட்டில் 2016 ஆல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி, 2021 இல் தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சுவேதா, 2022 இல் சத்யா என சென்னை ரயில் நிலையங்களில் இளம்பெண், மாணவிகள் படுகொலைகள் தொடர்வதை குறைப்பதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்கும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...