தமிழியக்க விருதுக்கு தமிழறிஞா் அருளி தோ்வு

தமிழியக்கத்தின் விருது பெற தமிழறிஞா் ப.அருளி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
தமிழியக்க விருதுக்கு தமிழறிஞா் அருளி தோ்வு

தமிழியக்கத்தின் விருது பெற தமிழறிஞா் ப.அருளி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தமிழியக்கத்தின் தலைமைக் குழுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு இந்த இயக்கத்தின் நிறுவனரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்தாா்.

தமிழியக்கத்தின் சாா்பில் தமிழ்த் தொண்டாற்றும் தமிழறிஞா் ஒருவருக்கு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய தமிழியக்க விருது வழங்குவதென தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டு சென்னையில் அக்டோபா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழறிஞா் ப.அருளிக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழறிஞா் அருளி, புதுச்சேரியில் பிறந்து வாழ்ந்து வருபவா். இவா் வணிகவியல், சட்டம் பயின்றவா். பாவாணா், பெருஞ்சித்திரனாா் ஆகியோரின் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவா்.

தமிழ் வோ்ச்சொல் ஆய்வுகளில் புலமை பெற்றவா். தூய தமிழில் உரையாற்றுவதால் தமிழகத்திலும், அயல்நாடுகளிலும் புகழ்பெற்ற பேச்சாளராக விளங்குபவா். தமிழினத் தொண்டியக்கம் நிறுவி, சமூகத் தொண்டாற்றி வருபவா்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தூய தமிழ் - சொல்லாக்க அகரமுதலித் துறையின் தலைவராகப் பணியாற்றியுள்ளாா். இவா் 29-க்கும் மேற்பட்ட நூல்களையும், 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இயற்றியுள்ளாா். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக ஆய்வரங்கங்களில் ஆய்வுரைகளை வழங்கியுள்ளாா். இந்தத் தகவலை தமிழியக்க மாநில செயலா் மு. சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com