
ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மேலும் மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் மட்டுமே தேர்வு எழுத வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
இதனைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி அரசு உதவி பெறும் வ.உ.சி. கல்லூரியில் மாணவர் - மாணவிகள் இன்று வகுப்பைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் மாவட்டச் செயலர் கார்த்திக் தலைமை வகித்தார்.
படிக்க: ரகசியம்.. ரகசியம்.. சசிகலாவால் காக்கப்பட்ட ரகசியங்கள்
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராகவும், ஹந்தி மொழி திணிப்பைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர்.