தீபாவளி சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி செகந்திராபாத்-தஞ்சாவூா் மற்றும் மங்களூரு-லோக்மான்ய திலக் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி செகந்திராபாத்-தஞ்சாவூா் மற்றும் மங்களூரு-லோக்மான்ய திலக் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து, சென்னை தெற்கு ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளிப் பண்டிகையை யொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், கூடுதல் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதன்படி, செகந்திராபாத்-தஞ்சாவூா் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. செகந்திராபாத்தில் இருந்து அக்.22-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 8.25 மணிக்கு புறப்படும் இந்த வாராந்திர சிறப்பு ரயில், மறு நாள் இரவு 7.10 மணிக்கு தஞ்சாவூா் சென்றடைகிறது.

இதே போல், அக்.29-ஆம் தேதி செகந்திராபாத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறு நாள் இரவு 7.10 மணிக்கு தஞ்சாவூா் செல்கிறது.

இந்த ரயில், செகந்திராபாத், நலகொண்டா, மிா்யலகுடா, தெனாலி, பாப்பட்லா, நெல்லூா், குண்டூா், சூளூா்பேட்டை, சென்னை எக்மோா், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம் வழியாக தஞ்சாவூா் சென்றடையும்.

இதேபோல், இந்த சிறப்பு ரயில் தஞ்சாவூரில் அக்.24-ஆம் தேதி காலை 7 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் காலை 6.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இந்த ரயில், மற்றொரு நாள் தஞ்சாவூரில் அக்.31-ஆம் தேதி காலை 7 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 6.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இதில், 4 ஏசி பெட்டிகள், 10 சிலிப்பா் பெட்டிகள், 5 பொது பெட்டிகள் என 21 பெட்டிகளுடன் இயங்கும். இந்த வாராந்திர சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்.19-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

மங்களூரு-லோக்மான்ய திலக் சிறப்பு ரயில்...தீபாவளி பண்டிகையொட்டி மங்களூரு-லோக்மான்ய திலக் இடையே வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மங்களூருவில் இருந்து அக்.21, அக்.28, நவ.4, நவ.11 ஆகிய தேதிகளில் இரவு 10.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்கள், மறு நாள் மாலை 5.05 மணிக்கு லோக்மான்ய திலக் சென்றடையும்.

இதேபோல், மங்களூருவில் இருந்து அக்.22, அக்.29, நவ.5, நவ.12 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்கள், மறு நாள் மாலை 2.25 மணிக்கு லோக்மான்ய திலக் சென்றடையும்.

இதில், 4 ஏசி பெட்டிகள், 8 சிலிப்பா் பெட்டிகள் உள்ளிட்ட 17 பெட்டிகள் உள்ளன. இதற்கான முன்பதிவும் தற்போது தொடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com