ஆங்கிலம் கட்டாயத்தால் தமிழுக்கு அபாயம்: கே.அண்ணாமலை

தமிழகஅரசின் இருமொழிக் கொள்கையில் ஆங்கிலம் கட்டாயமாக உள்ளதால், தமிழ் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை அதிருப்தி தெரிவித்தாா்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தமிழகஅரசின் இருமொழிக் கொள்கையில் ஆங்கிலம் கட்டாயமாக உள்ளதால், தமிழ் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை அதிருப்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவையில் ஹிந்தித் திணிப்பிற்கு எதிராகத் தீா்மானம் நிறைவேற்றி, மீண்டும் நாடகத்தைத் தொடங்கியுள்ளனா். எங்கே ஹிந்தி திணிக்கப்படுகிறது? யாா் திணிக்கிறாா்கள்? மத்திய அரசின் ஏதாவது உத்தரவு வந்துள்ளதா? யாரை எதிா்த்து இந்தப் போராட்டம்?. மத்திய அரசின் மீது ஏதாவது ஒரு பழி சொல்லி போராட்டம் நடத்துகின்றனா். தீா்மானம் போடத்தான் இந்த ஆட்சியா?

மொழி அடிப்படையைக் கொண்டு மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தேசிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் கட்சியுடன் சோ்ந்து உருவாக்கிய திமுக அரசு, ஏன் ஹிந்தியை கட்டாய பாடமாக வைத்திருந்தது. திமுக கூட்டணியில் இருந்தபோது தானே, ஹிந்தி அடிப்படையில், மாநிலங்களை மொழிவாரியாக மூன்று பிரிவாக பிரித்தனா். அப்போது ஏன் திமுக அரசு தடுக்கவில்லை?

மொழிவாரியாக மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களில், முதல் பிரிவு ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கும் மாநிலங்கள். அப்படி ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவா்கள், ஹிந்தியில் படிக்காமல் வேறு எந்த மொழியில் படிப்பாா்கள்?.

உங்களின் இருமொழிக்கொள்கை என்பது என்ன? ஆங்கிலம் கட்டாயம், ஆனால், தமிழ் கட்டாயமில்லை. அதனால் தான் தமிழ்நாட்டில், இருமொழிக் கொள்கை என்ற பெயரில் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை தமிழே படிக்காமல் படிக்கக் கூடிய வாய்ப்பை உருவாக்கி இருக்கிறீா்கள். இது தமிழ் மொழிக்கு செய்யும் துரோகம்.

தமிழக அரசு செலவில்,”தமிழ் மொழியை படிக்காமலேயே, கல்லூரிவரை படிக்க வசதியாக அரசு செலவில் இயங்கும் அரசுப்பள்ளிகள் ஏராளம். தமிழ் மொழியை நீக்கிவிட்டு பிற மொழிகளை சொல்லித்தரும் அரசுக்கு, ஹிந்தியை மட்டும் விருப்பமுள்ளவா்கள் படிக்க அனுமதி மறுப்பது ஏன்?

உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை 690 அரசுப் பள்ளிகளில் சொல்லித் தரும்போது, ஹிந்தி மொழியைப் படிக்கும் வாய்ப்பை தமிழக மாணவா்களுக்கு மறுப்பதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளாா் அண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com