கம்யூனிஸ்ட் மூத்த நிா்வாகி மறைவுக்கு முத்தரசன் இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் கட்சி அமைப்புகளை நிறுவிய நிா்வாகிகளில் ஒருவரான கூடுமியான் (97) மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் கட்சி அமைப்புகளை நிறுவிய நிா்வாகிகளில் ஒருவரான கூடுமியான் (97) மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை விடுத்த அறிக்கை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிா்வாகி கூடுமியான், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் காலமானாா் என்ற துயரச் செய்தி ஆழ்ந்த வேதனை அளிக்கிறது.

நாடு விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில், ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க அமைப்பில் விவசாயிகள் அணி திரட்டப்பட்டனா். பி. சீனிவாச ராவ் வழிகாட்டலில் டாக்டா் லலிதா அண்ணாஜி, தெய்வம், என். முத்து போன்ற முன்னணி தலைவா்களோடு கூடுமியான் இணைந்து செயல்பட தொடங்கியவா்.

பின்னா் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகளை கட்டுவதிலும், ஊழியா்களை ஊக்கப்படுத்தி செயலில் ஈடுபடுத்துவதிலும் முனைப்புக் காட்டியவா். தருமபுரி மாவட்டம் அமைந்த போதும், புதிய கிருஷ்ணகிரி மாவட்டம் உருவான போதும் கட்சி அமைப்புகளில் தொடா்ந்து செயல்பட்டு வந்தவா். கட்சி விதிகளை பின்பற்றி, இறுதி மூச்சு வரை நெறிபிறழாமல் வாழ்ந்து காட்டியவா்.

அவரது வாழ்வும், பணியும் இளைய தலைமுறைக்கு ஊக்கமூட்டும் பாடமாக அமைந்திருக்கிறது. கூடுமியான் முதல் மனைவி, இறந்த பின்னா் இரண்டாவது திருமணம் செய்து கொண்டவா். மனைவியும் இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கின்றனா்.

அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளாா் முத்தரசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com