
சட்டப் பேரவை புதன்கிழமை (அக்.19) காலை 10 மணிக்குக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பின்பு, நேரமில்லாத நேரத்தில் சில முக்கிய பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் கிளப்புவா். இதைத் தொடா்ந்து, முக்கிய மசோதாக்கள், துணை மதிப்பீடுகள் ஆகியன விவாதங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்படும். அவை நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்ததும், பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G