தீபாவளி: திருநெல்வேலி, திருச்சி, ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளிப்பண்டிகையொட்டி தாம்பரம்-திருநெல்வேலி, தாம்பரம்-திருச்சி, சென்னை சென்ட்ரல்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 
தீபாவளி: திருநெல்வேலி, திருச்சி, ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளிப்பண்டிகையொட்டி தாம்பரம்-திருநெல்வேலி, தாம்பரம்-திருச்சி, சென்னை சென்ட்ரல்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. ஏற்கெனவே தீபாவளி சிறப்புப் பேருந்துகள் குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்த நிலையில் தற்போது தீபாவளி சிறப்பு ரயிகள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வேயும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி தீபாவளிப்பண்டிகையொட்டி தாம்பரம்-திருநெல்வேலி, தாம்பரம்-திருச்சி, சென்னை சென்ட்ரல்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருச்சியிலிருந்து இருந்து அக்.22-ஆம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், இரவு 7 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. மறுமார்க்கம், அக்.27-ஆம் தேதி தாம்பரத்திலிருந்து இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறு நாள் அதிகாலை 2.50 மணிக்கு திருச்சி செல்கிறது.

மேலும் அக்.22ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் மதுரை வழியாக மறு நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும்.  மறுமார்க்கம் அக்.26ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறு நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. 

இதேபோல் சென்னை சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அக்.23ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தாம்பரம், காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக மறு நாள் பிற்பகல் 11 மணிக்கு ராமேஸ்வரம் செல்கிறது. பின்னர் அன்றைய தினம் அக்.24ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு ராமஸ்வரத்திலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறு நாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com