
கோப்புப் படம்
கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்.21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகள் நிரம்பி வழிவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (அக்.21) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்
அதுபோல மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G