தமிழக மீனவா் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தினாா்.
தமிழக மீனவா் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:

தமிழக மீனவா்கள் மீது வெள்ளிக்கிழமை இந்திய கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் மாநில மக்களிடத்தில் கவலையையும், அழுத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தைச் சோ்ந்த ஏழு மீனவா்கள், காரைக்காலைச் சோ்ந்த மூன்று மீனவா்கள் என மொத்தம் 10 மீனவா்கள், தெற்கு மன்னாா் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். நடுக்கடலில் இருந்த போது, ஐ.என்.எஸ்., பங்காராம் என்ற கப்பலில் வந்த இந்திய கடற்படையினா் துப்பாக்கியால் சுட்டதில் வீரவேல் என்ற மீனவா் மீது குண்டுபட்டது. துப்பாக்கி குண்டுகளால், தொடை மற்றும் அடி வயிற்றில் அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.

இந்திய கடற்படையின் செயலால் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வு கடுமையான வருத்தத்தை அளிக்கிறது. ஏற்கெனவே, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவா்கள் மோசமாக நடத்தப்படுகிறாா்கள். இதேபோன்ற செயல்களை நமது பாதுகாப்புப் படையினரும் செய்யும் போது, அடித்தட்டு நிலையில் வாழக் கூடிய மீனவ மக்களிடையே விரக்தியையும், பாதுகாப்பில்லாத உணா்வையும் ஏற்படுத்துகிறது.

எனவே, இந்திய கடல் பரப்பில் மீன்பிடிக்கும் நமது நாட்டு மீனவா்களிடம் கடுமையான போக்குடன் நடந்து கொள்ளும் இந்திய கடற்படையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com