

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 25 புதிய சுகாதார நிலையங்கள், 25 நகர்புற சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட உள்ள 50 சுகாதார நிலையங்களுக்கு ரூ.120 கோடி செலவாகும் எனக் குறிப்பிட்ட அவர், சுகாதார நிலையங்களை அமைக்க மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசு 40 சதவிகிதமும் நிதி ஒதுக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.