கந்து வட்டி கொடுமை: வெள்ளி கொலுசு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

கந்துவட்டிக் கொடுமையால் வெள்ளி கொலுசு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கந்து வட்டி கொடுமை: வெள்ளி கொலுசு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

சேலம் செவ்வாய்ப்பேட்டை  பகுதியில் கந்துவட்டிக் கொடுமையால் வெள்ளி கொலுசு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சேலம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். வெள்ளித் தொழிலாளியான இவர் குடும்பத்துடன் செவ்வாப்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது குடும்பத் தேவைக்காக அதே பகுதியை சேர்ந்த ஜெயகுமார் என்பவரிடம் வட்டிக்கு ரூ.50,000 வாங்கியுள்ளார் வாங்கிய பணத்திற்கான வட்டியை மாதாமாதம் கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ரூ.50 ஆயிரத்துக்கு ஒன்றரை லட்சம் வரை வட்டி கொடுத்த ரமேஷ் ஒரு சில மாதங்கள் முறையாக வட்டியை கொடுக்க தவறியதால் வட்டிக்கு மேல் வட்டி போட்டு சுமார் ரூ.3 லட்சம் கேட்டு ரமேஷின் குடும்பத்தை ஜெயகுமார் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், வீட்டிற்கு வந்து ரமேஷின் மனைவியை அவதூறு வார்த்தைகளால் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை காலை மனைவி கடைக்கு சென்ற பிறகு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  கடைக்கு சென்ற மனைவி வீட்டிற்கு வந்து பார்த்போது ரமேஷ் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சம்பவம் குறித்து செவ்வாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
 
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் ரமேஷ் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.

இந்த நிலையில் கந்துவட்டி கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜெயகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் செவ்வாபேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அவர்கள் கூறும்போது பத்து நாள்களுக்கு ஒரு முறை வட்டி கணக்கிட்டு வசூலுக்கப்படுவதாகவும், 10 நாள்களுக்கு மேல் வட்டி செலுத்தாவிடில் வட்டிக்கு வட்டி போட்டு இதுவரை ஒன்றரை லட்சம் வரை வசூல் செய்துள்ளதாகவும், மேலும் ரூ.3 லட்சம் வட்டியுடன் சேர்த்து அசல் பணத்தை தர வேண்டும் என துன்புறுதிதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் இதற்கு காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் உடலை வாங்க மாட்டோம் என உறுதிப்பட தெரிவித்தார்

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கந்துவட்டிக் கொடுமையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காவல்துறை மெத்தனப் போக்கு காரணமாகவே இது போன்ற நிகழ்வுகள் நடப்பதாகவும் தமிழக அரசு இதற்காக தனி சட்டம் இயற்றினாலும் அதன் நடைமுறைப்படுத்த காவல்துறை தயங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே கந்துவட்டி கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்னை முடிவுக்கு வரும் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com