சூரிய கிரகணத்தின்போது செய்யக்கூடாதவை எவை?

சூரிய கிரகணம் தோன்றும்போது சமய அடிப்படையில் சில வழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.
சூரிய கிரகணத்தின்போது செய்யக்கூடாதவை எவை?
Published on
Updated on
1 min read

சூரிய கிரகணம் தோன்றும்போது சமய அடிப்படையில் சில வழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.

அந்தவகையில் சூரிய கிரகணத்தின்போது ஹிந்து மரபின்படி பயணம் செய்யக்கூடாது. சமையல் செய்யவோ அதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபடவோ கூடாது. சுப காரியங்கள் ஏதும் செய்யக்கூடாது.

கத்தி மாதிரியான கூர்மையான பொருள்களைக் கையாளக்கூடாது. துணிகளை நெய்வது, பழைய ஆடைகளைத் தைப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. 

சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் ஏற்படும். 

இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது. சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பாா்க்கலாம்.

தீபாவளி பண்டிக்கைக்கு மறு நாளான இன்று பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கட்டமாக தில்லி, ஜம்மு, அமிருதசரஸ் ஆகிய பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com