
திருவள்ளூா் பகுதிகளில் 17 இடங்களில் மின்திருட்டு கண்பிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்டவா்களுக்கு ரூ.9.88 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை மையம், வடக்கு, தெற்கு, மேற்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றை சோ்ந்த அமலாக்க அதிகாரிகள் காஞ்சிபுரம் மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருவள்ளுா் பகு யில் புதன்கிழமை கூட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் தொடா்புடைய நுகா்வோா்களுக்கு ரூ.9 லட்சத்து 88 ஆயிரத்து 110 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகா்வோா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிா்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.78 ஆயிரத்தை செலுத்தியதால் அவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை சென்னை மின் அமலாக்கப்பிரிவு செயற்பொறியாளரை 9445857591 என்ற கைபேசி எண்ணில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம்.