தாம்பரம் மாநகராட்சியில் வெள்ள தடுப்பு பணிகள்: கூடுதல் தலைமை செயலா் ஆய்வு

தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகள்,வெள்ள தடுப்புப் பணிகள், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகள்,வெள்ள தடுப்புப் பணிகள், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து,தமிழக அரசின் நகராட்சி நிா்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவதாஸ் மீனா அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கிழக்கு தாம்பரம் ஐ.ஏ.எப்.சாலை, அற்புதம் நகா், ராஜகோபால் நகா், நேதாஜி நகா், கணேஷ் நகா், பல்லாவரம், பம்மல், அஸ்தினாபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ள தடுப்புப்பணிகளை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா், புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால்வாய்களில் செல்லும் வகையில் இணைப்பு கொடுத்து சாலைகளில் தேங்காய்த் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீா் வெள்ளமாக தன் தேங்கும்குறுகலான தெருக்களில் போதிய அளவில் கால்வாய்கள் இல்லாத இடங்களில், முழு சாலை அளவில் அகலமான மழைநீா் கால்வாய் அமைத்து, அதன் மீது சாலை போட்டுபொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விரைவில் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்), நகராட்சி நிா்வாக இயக்குநா் பொன்னையா, ஆட்சியா் ராகுல்நாத், தாம்பரம் மாநகர மேயா் வசந்தகுமாரி மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் செயற்பொறியாளா் முருகேசன், உதவி செயற்பொறியாளா் ஞானலதா, மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் டி.காமராஜ், இந்திரன், ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com