
மனநல காப்பகவாசிகளான மகேந்திரன்-தீபா தம்பதியினருக்கு திருமண பரிசாக பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
காதல் வசப்பட்டு கரம்கோத்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகவாசிகளான மகேந்திரன்-தீபா தம்பதியினருக்கு திருமண பரிசாக பணி நியமன ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருபவா்களில் பெரும்பாலானோா் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனா். உறவினா்களால் கைவிடப்பட்ட சிலா் அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
காதல் வசப்பட்டு கரம்கோத்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகவாசிகளான மகேந்திரன்-தீபா தம்பதியினர்.
இந்நிலையில், அவ்வாறு மனநல காப்பகத்தில் தங்கி தொழில்பயிற்சி மேற்கொண்டு வரும் சென்னையை சோ்ந்தவா் மகேந்திரன் (42). வேலூரைச் சோ்ந்தவா் தீபா (36) இருவா் காதல்வசப்பட்டு இல்லற வாழ்வில் இணையராக கரம்கோர்க்க முடிவு செய்தனர்.
காப்பக நிா்வாகம் சார்பில் மகேந்திரன்-தீபா காதல் ஜோடிகள் திருமணம் கீழ்ப்பாக்கம் மனநல காப்பக நுழைவாயில் எதிரே உள்ள, சித்தி புத்தி விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடத்தி வைக்கப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்து கொடுக்க, கெட்டிமேளம் கொட்ட மகேந்திரன், தீபாவுக்கு தாலி கட்டினார்.
மணமக்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
சென்னை அயனாவரத்தில் உள்ள கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று, குணமடைந்த இருவருக்கு அவ்வளாகத்திலேயே நடைபெற்ற திருமண விழாவில் திருமண பரிசாக மணமக்களுக்கு அந்த மருத்துவமனையிலேயே பணியாற்றிட பணி ஆணைகள் வழங்கப்பட்டது. #masubramanian #TNHealthminister pic.twitter.com/JomiRO7Mqy
— Subramanian.Ma (@Subramanian_ma) October 28, 2022
திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்த மணமக்கள்.
திருமணத்திற்கு வந்திருந்த சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றி அழகன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், மருத்துவமனை இயக்குநர் பூர்ணசந்திரிகா உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்களை வாழ்த்திய சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றி அழகன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், மருத்துவமனை இயக்குநர் பூர்ணசந்திரிகா
இந்நிலையில், திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களுக்கு திருமண பரிசாக அந்த மருத்துவமனையிலேயே வார்டு மேற்பார்வையாளருக்காக பணியாற்றுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார்.
மகேந்திரன் பி.காம்., எம்பிஏ., எம்பில் பட்டாதாரி, தீபா எம்.ஏ., பி.எட் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.