குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை ஏற்க இயலாது: நீதிமன்றம்

இதனை பள்ளிகள் எவ்வாறு ஏற்கின்றன என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை ஏற்க இயலாது: நீதிமன்றம்

மதுரை: குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு ஆட்டோ, ரிக்சா போன்றவற்றில் அனுப்புகின்றனர். இதனை பள்ளிகள் எவ்வாறு ஏற்கின்றன என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், பள்ளிக்கு குழந்தைகளை ஆட்டோவில் அனுப்புவதை ஏற்க முடியாது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் தாக்கல் செய்த பொது நலன் மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் பள்ளி வாகன விதிமுறைகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு பல விதிகள் இருக்கும் போது ஆட்டோ ரிக்சாக்களுக்கு என்ன விதி இருக்கிறது.

பள்ளி வாகனங்கள் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், வாகன விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com