
சென்னை: அக்டோபர் 31 அல்லது நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதிக்குள் சென்னைக்கு ஒரு சம்பவம் / ஆச்சரியமான நாள் காத்திருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 31ஆம் தேதி முதல் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மழை பற்றிய தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது,
தமிழகத்தின் மத்திய கடலோர, தெற்குக் கடலோர மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் தொடங்கிவிடும். வடக்கு கடலோர தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளுக்கு அக்டோபர் 31 முதல் நவம்பர் முதல் வாரம் வரை மிகப்பெரிய மழை நாள்கள் காத்திருக்கின்றன.
வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சியானது, அக்டோபர் 31 அல்லது நவம்பர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நல்ல மழையைக் கொடுக்கும், சென்னைக்கு சம்பவம் / ஆச்சரியமான நாள்கள் காத்திருக்கின்றன. இந்த ஆறு நாள்களில், சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு நாளாவது மிகச் சிறந்த மழை நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு: கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தைப் போலவே இந்த ஆண்டு நவம்பர் மாதமும் மிகச் சுறுசுறுப்பாக இருக்கப் போகிறது என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.