தங்கம் விலை... இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சனிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தெய்வீக நன்மைகளை பெற, பெண்கள் இடது கையில் மோதிரத்தை அணிய வேண்டும், ஆண்கள் வலது கையில் மோதிரத்தை அணிய வேண்டும்.
தெய்வீக நன்மைகளை பெற, பெண்கள் இடது கையில் மோதிரத்தை அணிய வேண்டும், ஆண்கள் வலது கையில் மோதிரத்தை அணிய வேண்டும்.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சனிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நாட்டில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன.

நாட்டின் பணவீக்க உயர்வுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் தங்கத்தில் மக்கள் அதிகயளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். 

தங்கத்தில் முதலீடு செய்வதை சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வரை முக்கிய முதலீடாக கருதுவதால் அதில் அதிகயளவில் முதலீடு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் தங்கத்தின் விலை திடீரென சற்று குறைவதும் அடுத்து சில நாள்களில் குறைக்கப்பட்ட விலையைவிட இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிப்பதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்து வந்தது. 

செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. அக்டோபார் மாத தொடக்கத்தில் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாள்களாக குறைந்தே காணப்படுகிறது.  

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.37,640-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து, ரூ.4,705-க்கு விற்பனையாகி வருகிறது. 

அதேவேளையில், வெள்ளி கிராமுக்கு 70 பைசா குறைந்து ரூ.63 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.700 குறைந்து ரூ.63,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,735
1 சவரன் தங்கம்............................... 37,880
1 கிராம் வெள்ளி............................. 63.70
1 கிலோ வெள்ளி.............................63,700

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,745
1 சவரன் தங்கம்............................... 37,960
1 கிராம் வெள்ளி............................. 63.50
1 கிலோ வெள்ளி.............................63,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com