'தென்னகத்து போஸ்'.. தேவர் ஜெயந்தியையொட்டி மு.க.ஸ்டாலின் புகழாரம்

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி  முத்துராமலிங்க தேவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 
'தென்னகத்து போஸ்'.. தேவர் ஜெயந்தியையொட்டி மு.க.ஸ்டாலின் புகழாரம்

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி  முத்துராமலிங்க தேவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா பசும்பொன்னில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி மதுரை கோரிப்பாளையத்திலுள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு திமுக சார்பில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து அவர்கள் மரியாதை செலுத்திய புகைப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் பகிர்ந்துள்ளார். முதுகுவலி காரணமாக மு.க.ஸ்டாலின் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. நீண்ட பயணங்களைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து ஓய்வு பெற்று வருகிறார்.

இந்நிலையில், தேவர் ஜெயந்தியையொட்டி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தென்னகத்து போஸ்" ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! எனக் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com