முத்துராமலிங்கத் தேவருக்கு வெள்ளி கவசம்: ஓபிஎஸ்

விடுதலைப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் 115-ஆவது ஜயந்தி விழா மற்றும் 60-ஆவது குருபூஜை விழாவினையொட்டி, வெள்ளி கவசம் அளித்து ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
முத்துராமலிங்கத் தேவருக்கு வெள்ளி கவசம்: ஓபிஎஸ்

விடுதலைப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் 115-ஆவது ஜயந்தி விழா மற்றும் 60-ஆவது குருபூஜை விழாவினையொட்டி, வெள்ளி கவசம் அளித்து ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவரும், ஆன்மீகம், பொதுவுடைமை, ஆங்கிலேயே ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றை குறிக்கோள்களாகப் கொண்டு செயல்பட்டவரும், தமிழகம் உயர, தமிழ்நாடு வளம் பெற, தமிழ்ச் சமுதாயம் மேம்பட உழைத்தவரும், "வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம், விவேகம் இல்லாத முரட்டுத்தனம்" என்று முழங்கியவரும், தன்னலமின்றி நாட்டிற்காகவும், நாட்டு மக்களின் நலுனுக்காவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காகவும் அரும்பாடுப்பட்டவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். 

அவரது 115 ஆவது பிறந்த நாள் மற்றும் 60 ஆவது குருபூஜை நாளான ஞாயிற்றுக்கிழமை(அக்.30) மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவாக, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் இதர சுப நாள்களில் வெள்ளிக்கவசம் அணிவிக்கும் பொருட்டு, "10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசம்" பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடக் காப்பாளர் ந.காந்தி மீனாளிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வழங்கி மரியாதை செலுத்துவார் என கூறப்பட்டிருந்தது. 

அதன்படி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதர்வாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார். அப்போது வெள்ளி ருத்ராட்சமாலையை தேவர் சிலைக்கு அணிவித்தார். 

அதனைத் தொடர்ந்து தேவர் சிலைக்கு 10.44 கிலோ எடையில், ரூ.9,11,745 மதிப்புள்ள புதிய வெள்ளிக் கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் வசம் ஒப்படைத்தார். 

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக சார்பில் வெள்ளிக் கவசம் வழங்கியிருப்பது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதன்மூலம் தென் மாவட்ட மக்களின் மனதில் ஓ.பன்னீர்செல்வம் தனியிடம் பிடித்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com