
வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிராமத்தில் நேரடி நெல் விதைப்புக்கு ஆயத்தமான வயல்களில் தேங்கிய மழை நீர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை இரவும், வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி ஏற்பட்ட கனமழையால் நெல் தரிசு வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நேரடி நெல் விதைப்புப் பணிகள் பாதிப்படைந்துள்ளது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த வாரம் தொடங்கி அவ்வப்போது மழைப் பொழிவு இருந்து வந்தது. புதன்கிழமை மாலை தொடங்கி வாய்மேடு, ஆயக்காரன்புலம் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த மழை வேதாரண்யம் நகரப் பகுதியை விடவும் வாய்மேடு, கரியாப்பட்டினம், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம்,குரவப்புலம் சுற்றுப் பகுதியில் உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளில் அதிக அளவாக உணரப்பட்டது.