ஏற்காட்டில் கனமழை: திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு

ஏற்காட்டில் பெய்த பலத்த மழையின் காரணமாக திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்காட்டில் கனமழை: திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு

ஏற்காட்டில் பெய்த பலத்த மழையின் காரணமாக திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளை காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏற்காட்டில் இருந்து கீழ்நோக்கி வரும் தண்ணீர் திருமணிமுற்றாற்றில் கலக்கிறது. திருமணிமுத்தாற்றில் கலக்கப்படும் தண்ணீர் சேலம் மாநகராட்சி பகுதிகள் வழியாக செல்வதால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

திருமணிமுத்தாற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் பொது மக்களுக்கு சேலம் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது ஆற்றில் இறங்கவோ செல்பி எடுக்கவோ கூடாது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமணிமுத்தாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரை ஒட்டியுள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நிலத்தடி நீரும் உயரம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

சேலம் அணை மேடு பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து அருவிப்போல் கொட்டுவதால் அதனை ஏராளமானோர் பார்த்து ரசித்து செல்கின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com