
ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை கேரள மக்களால் வியாழக்கிழமை (செப்.8) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வசிக்கும் கேரள மக்களும் ஓணத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடுவதற்கு சென்னை, திருப்பூா், கோவை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய ஐந்து மாட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் உள்ளூா் விடுமுறை விட கோரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த மாவட்டங்களைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.