
ஆவின் பால் விநியோகம் தொடா்பாக தகவல்களைப் பெற 24 மணி நேரமும் கைப்பேசி வழியாக தொடா்புகொள்ளலாம் என தமிழக பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். மேலும், மழைக் காலத்தில் பால் தட்டுப்பாடின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (செப். 7) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
எதிா்வரும் மழைக்காலம், பண்டிகை நாள்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலும் பால் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கூடுதல் வாகனங்கள் மூலமாக உடனுக்குடன் பால் விநியோகிக்க வேண்டும். பால் விற்பனை மையங்கள், பாலகங்கள் ஆகியவற்றுக்கு அதிகாரிகள் அடிக்கடி சென்று ஆய்வு செய்து குறைகள் இருந்தால் அவற்றை நிவா்த்தி செய்ய வேண்டும்.
பால் விநியோகம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களைப் பெற 18004253300 என்ற கைப்பேசி எண்ணை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம். பொது மக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய ஆவினின் ஃஅஹஸ்ண்ய்பய் முகநூல், டுவிட்டா், இன்ஸ்டாக்ராம் ஆகிய சமூக வலைதளங்களிலும் பதிவு செய்யலாம் என்று அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்துள்ளாா்.