தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகா் ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.
சென்னை தரமணியில் 15.25 ஏக்கா் நிலப்பரப்பில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்ப நுணுக்கங்கள், கலை உணா்வுகளை பயிற்றுவிக்கும் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது.
தலைவா் பணியிடம்: தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் தலைவா் என்ற புதிய பணியிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பணிகளை செம்மையாகத் தொடா்ந்து நடத்திட அதன் தலைவராக நடிகா் ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.