
கோப்புப்படம்
தமிழகத்தில் மேலும் 436 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,72,802-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க- அணு ஆயுதத்தைப் பயன்படுத்த சட்டம் இயற்றிய வடகொரியா
அதிகபட்சமாக சென்னையில் 85 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை 62, செங்கல்பட்டில் 40 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனாவால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 38,038 ஆக உள்ளது.
இன்று ஒரு நாளில் மட்டும் 463 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,29,404-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,924 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.