மன்னார்குடியில் கண்தானம்: விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னை மன்னார்குடி லயன்ஸ் சங்கம், மன்னார்குடி மனிதம் லயன்ஸ் சங்கம் இணைந்து கண்தான விழிப்புணர்வு மினி  மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடியில் நடைபெற்ற கண் தானம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டவர்கள் .
மன்னார்குடியில் நடைபெற்ற கண் தானம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டவர்கள் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னை மன்னார்குடி லயன்ஸ் சங்கம், மன்னார்குடி மனிதம் லயன்ஸ் சங்கம் இணைந்து கண்தான விழிப்புணர்வு மினி  மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடி வ.உ.சி.சாலை பின்லே மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மனிதம் லயன்ஸ் சங்க தலைவர் எஸ்.ராமதாஸ் தலைமை வகித்தார்.

மன்னார்குடி நகர்மன்றத் தலைவர் மன்னை த.சோழராஜன்,துணைத் தலைவர் ஆர்.கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்னார்குடி காவல்துணைக் கண்காணிப்பாளர் கே.கே.பாலச்சந்தர், மாரத்தான் ஓட்டத்தினை,பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.மணிவண்ணன், லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் ஜி.கே.ஸ்ரீநாத், வட்டாரத் தலைவர் எஸ்.பி.எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள், சேவை மற்றும் தன்னார்வு அமைப்புகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் வ.உ.சி.சாலையில் தொடங்கி காந்திசாலை, பந்தலடி, காமராஜர்சாலை, மேலராஜவீதி வழியாக ராஜகோபாலசாமி கோயில் அருகே நிறைவடைந்தது.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்,பார்வைக்கோர் பயணம் மாவட்டத் தலைவர் எஸ்.விஜலெட்சுமி, மினி மாரத்தான் மாவட்டத் தலைவர் எம்.ஆறுமுகம் ஆகியோர் கண்தானம் விழிப்புணர்வு குறித்து விளக்கும் அளித்து. மாரத்தானில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

நிகழ்ச்சியின் தொடங்கத்தில், லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.ரமேஷ் வரவேற்றார். நிறைவில், மனிதம் லயன்ஸ் சங்க செயலர் எஸ்.கண்ணன் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com