செப்.15-ல் மதுரையில் அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு செப்.15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.  
செப்.15-ல் மதுரையில் அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு செப்.15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். 
இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், காஞ்சி தந்த காவியத் தலைவர் - உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர் - தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ் நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர் - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் - “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன் - “மெட்ராஸ் ஸ்டேட்” என்ற பெயரை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப் பெரும் தனயன் - சுயமரியாதை சுடரொளி - சொக்க வைக்கும் சொற்பொழிவாளர் - எழுத்து வேந்தர் - தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் - பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 114வது ஆண்டு பிறந்த நாளான 15.9.2022 அன்று காலை 7.00 மணி அளவில் மதுரை, கீழவெளி வீதி - மேலவெளி வீதி சந்திப்பு, நெல்பேட்டை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com