
லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் எதுவும் கைப்பற்றபடவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மீதான மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு வழக்கில், அவரது வீடு உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடைபெற்றது.
தமிழகத்தில் இன்று முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் வீடு உள்பட 39 இடங்களில் சோதனை நடைபெற்றது.
பல்வேறு ஊழல் வழக்கு மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடு என ஏற்கனவே இரண்டுமுறை வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்று மூன்றாவது முறையாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் இடங்களில் ரூ.50 லட்சம் பறிமுதல்
லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைக்கு எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது:
சோதனையில் எதுவும் கைப்பற்றபடவில்லை. பழிவாங்கும் நோக்கத்தில் இந்த சோதனை நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருப்பதால் இந்த சோதனை நடைபெற்றது என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G