
அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான வழக்கை 2 வாரத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலை வாங்கித் தருவதாக ரூ.65 லட்சம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் என்.சுப்பிரமணியன் மீது சேலத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையும் படிக்க- நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை நீட்டிப்பு
இவ்வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், என்.சுப்பிரமணியன் மீதான வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க சேலம் மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான மோசடி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.