தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது?

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் பொது காலாண்டுத் தோ்வு கிடையாது என அறிவித்த பள்ளிக் கல்வித்துறை காலாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது?
தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது?


சென்னை: தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் பொது காலாண்டுத் தோ்வு கிடையாது என அறிவித்த பள்ளிக் கல்வித்துறை காலாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அக்டோபர் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும். அடுத்து அக்டோபர் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

அதேவேளையில், தமிழகத்தில்  6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதன்படி, அக்டோபர் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதலாக விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

பொது காலாண்டுத் தோ்வு கிடையாது
காலாண்டுத் தோ்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே முடிவு செய்து கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை நேற்று அறிவித்திருந்தது.

கரோனா காரணமாகக் கடந்த ஆண்டு பொதுத் தோ்வுகள் வழக்கத்தை விடத் தாமதமாயின. அதே போல பள்ளி மாணவா்களுக்கு வகுப்புகளும் காலதாமதமாகவே திறக்கப்பட்டன. இந்நிலையில் காலாண்டுத் தோ்வு குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தது.

அதன்படி செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் காலாண்டுத் தோ்வை முடிக்கும் வகையில் தோ்வு நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் தமிழக பள்ளிகளில் நிகழாண்டு பொது காலாண்டு தோ்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டுத் தோ்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை திடீா் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் காலாண்டுத் தோ்வுகளை நடத்தி முடிக்கவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலாண்டுத் தோ்வைப் பொருத்தவரை பள்ளி அளவில் வினாத்தாள்களைத் தயாரித்துத் தோ்வை நடத்திக் கொள்ளலாம் எனவும், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தோ்வு நடத்தப்படும் போது வினாத்தாள் வெளியாகும் நிலையில் இந்த நடைமுறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com