நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் விவசாய நிலம் வாங்க 50% மானியம்

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் விவசாய நிலம் வாங்க 50% மானியம்

நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் 200 நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்க ரூ.10,00,00,000 (பத்து கோடி ரூபாய்) மாநில அரசு நிதியிலிருந்து நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை(நிலை)எண்.79, ஆதி(ம)பந(சிஉதி) துறை, நாள்.10.09.2022-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com