திருமாவளவன் (கோப்புப் படம்)
திருமாவளவன் (கோப்புப் படம்)

பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின் பாஜக, ஆர்எஸ்எஸ்: திருமாவளவன்

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் உண்மை முகத்தை பொதுமக்கள் அறிந்துகொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
Published on

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் உண்மை முகத்தை பொதுமக்கள் அறிந்துகொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

சர்வதேச அமைப்புகளோடு தொடர்பு இருப்பது உறுதியானால், எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புகளை மத்திய அரசு தடை செய்யட்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் மூலம் பாஜகவினரே திட்டமிட்டு வன்முறையைத் தூண்டுகின்றனர்.

மிதவாத ஹிந்துக்கள், அடிப்படைவாத ஹிந்துக்கள் என்று எதுவும் கிடையாது. பெரும்பான்மை அடிப்படைவாத அதிகாரத்தில் அரசியல் அதிகாரத்தை வென்றுவிட முடியும் என பாஜகவினர் கருதுகின்றனர். அவர்கள் புறந்தள்ளக்கூடிய சதவிகிதத்தினர்தான். ஒட்டுமொத்த ஹிந்துக்களும் அப்படி இல்லை. அப்பாவி ஹிந்துக்கள், ஆர்எஸ்எஸ் ஹிந்துக்கள் என வகைப்படுத்திக்கொள்ளலாம்.

சர்வதேச அமைப்புகளோடு தொடர்பு இருப்பது உறுதியானால், எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புகளை மத்திய அரசு தடை செய்யட்டும்.

தமிழகத்தை குறிவைக்கும் சனாதன பயங்கரவாதத்தை முறியடிப்போம். சமய - சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம். இதற்காக அக்டோபர் 2ஆம் தேதி சமூக நல்லிணக்க பேரணி நடைபெறவுள்ளது. இதில் சனாதன சக்திகளுக்கு எதிரானவர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com