
சென்னை அருகே தப்ப முயன்ற ரெளடியை துப்பாக்கியால் சுட்டு காவல் துறையினர் கைது செய்தனர்.
தாம்பரம் அடுத்து பூந்தண்டலம் பகுதியில் ரெளடி லெனினின் கூட்டாளியான சச்சினை பிடிக்க சோமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர் சென்றுள்ளனர்.
அப்போது காவலர் பாஸ்கரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற சச்சினின் காலில் துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் பிடித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சச்சினை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிக்க | பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு 5 ஆண்டுகள் தடை
மேலும், சச்சின் வெட்டியதில் காயமடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட காவலர் பாஸ்கரை, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் சந்திட்து நலம் விசாரித்தார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சோமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.