விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நீரில் மூழ்கி 4 சிறார்கள் பலி: குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்க முதல்வர் உத்தரவு

திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :16 ஏப்ரல் 2023, 11:21 am

DIN

திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், முதலிபாளையம் கிராமம், மஜரா சிட்கோ, டி.நகர் என்ற முகவரியைச் சேர்ந்த இனியவன் த/பெ. பாலசுந்தரம் (வயது 12) மற்றும் சந்துரு, த/பெ.பாண்டியராஜன் (வயது 12) ஆகிய இருவரும் நேற்று அப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் குளித்த பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மத்தூர் உள்வட்டம், பட்ரஅள்ளி தரப்பு, முத்துநகர் என்ற முகவரியைச் சேர்ந்த திரு.முருகன், திருமதி.பார்வதி தம்பதியினரின் குழந்தைகள் செல்வி. புவனா (வயது 11) மற்றும் செல்வன். வினோத் (வயது 7) ஆகியோர் நேற்று பர்கூர் வட்டம், நாகம்பட்டி தரப்பு, எம்.பள்ளத்தூர் ஏரியில் குளித்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த நான்கு சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.