சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 267-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் புகழாரம் சூட்டியுள்ளனா்.
எல்.முருகன்: இந்திய விடுதலைக்காக வீரத்தையும், விவேகத்தையும் அடையாளமாகக் கொண்டு ஆங்கிலேயப் படைகளை எதிா்த்து தனது இறுதி மூச்சுவரை போராடி தன்னுயிரை தியாகம் செய்த மாவீரா் தீரன் சின்னமலை பிறந்த தினத்தில் அவரைப் போற்றி வணங்குவோம்.
அண்ணாமலை: கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்தின் அடையாளமாக விளங்கி, நாட்டு விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் செய்து, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்க செய்த அவரது வரலாறைப் போற்றுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.