சென்னையில் வி.பி.சிங்கிற்கு கம்பீர முழுவ உருவச் சிலை: முதல்வர் அறிவிப்பு

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் கம்பீர முழு திருவுருவச் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். 
சென்னையில் வி.பி.சிங்கிற்கு கம்பீர முழுவ உருவச் சிலை: முதல்வர் அறிவிப்பு

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் கம்பீர முழு திருவுருவச் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். 

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'அனைத்து வகையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய கொள்கை உரத்தை வழங்கியவர்களில் ஒருவர் வி.பி.சிங் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.  தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்னையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத் தந்தவர் வி.பி.சிங். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண தனது இல்லத்தில் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி 'இப்போது கருணாநிதி சொல்லப் போவதுதான் என் கருத்து' என்று சொன்னவர் வி.பி.சிங்.

சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டிய ஒப்பற்ற தலைவரான வி.பி.சிங்கின் நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்குத் தமிழ்ச் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்பதை மிகுந்த பெருமிதத்தோடு, இந்த மாமன்றத்தில் அறிவிக்க விரும்புகிறேன்.

உயர் வர்க்கத்தில் பிறந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் சிந்தித்த, எத்தனை உயர் பதவி வகித்தாலும் கொள்கையை விட்டுத் தராத, டயாலிசிஸ் செய்யப்பட்ட உடல்நிலையிலும் ஏழை மக்களுக்காக வீதிக்கு வந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வி.பி.சிங்கின் புகழ் வாழட்டும்' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com