முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் கணக்கில் புளூ டிக் நீக்கம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின், உத்திரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் கணக்கில் புளூ டிக் நீக்கம்!


சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின், உத்திரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

டெஸ்லா  நிறுவனர் எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். 

அதன் ஒரு பகுதியாக பிரபலங்கள் வைத்திருக்கும் ஃப்ளூ டிக் கணக்குகளுக்கு இனி மாதம் கட்டண சந்தா வசூலிக்கப்படும் என தன் ட்விட்டர் பக்கத்தில் எலான் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் அந்த முடிவில் எலான் மஸ்க் உறுதியாக இருந்தார்.

இந்த சூழலில் குறிப்பிட்ட சில நாடுகளில் ப்ளூ டிக் பயனர்கள் இடத்தில் சந்தா வசூலிக்கும் முறையில் ட்விட்டர் அறிமுகம் செய்தது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் பிரிட்டன் மற்றும் இந்தியாவில் ப்ளூ டிக் சந்தா அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், உத்திரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத், முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் ஷாருக்கான், அமிதாப் பச்சன், ஆலியா பட் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. 

செல்போன் செயலி மூலம் ரூ.900 செலுத்தாததால் பிரபலங்களின் கணக்கில் புளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட கணக்கில் புளூ டிக் இல்லை. முதல்வரின் அலுவலக கணக்கில் கிரே நிறத்திலான டிக் உள்ளது.

இனிமாத சந்தா ரூ.900 கட்டினால் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான ப்ளூ டிக் திரும்ப கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com